Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளிக்குச் சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹேமசந்திரன்(12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தின ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அதன் பிறகு மாலையில் வெகு நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போது அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். இருப்பின் அவர் வீட்டுக்கு வராதால் ஹேமச்சந்திரன் பெற்றார் மற்றும் உறவினர்கள் பதறி அடித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து. ஆனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இது பற்றி ஈரோடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தின் கரையோரம் மாணவர் ஒருவரின் பள்ளி சீருடை கிடந்து உள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விருப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பிறகு தீயணைப்பு படைவீரர்கள் குலளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். அதன்பிறகு நள்ளிரவு 1 மணிக்கு இறந்த நிலையில் மாணவன் ஹேமச்சந்திரன் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடற்கூறு பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விரிசார்ணையில், பள்ளி முடிந்தது ஹேமச்சந்திரன் கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு அவர் சென்றதால் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் ஹேமச்சந்திரன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெருசாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |