Categories
உலக செய்திகள்

பள்ளிக்குள் கத்தி கொண்டு சென்ற மர்ம நபர்… திகைத்துப்போன ஊழியர்கள்.. எதற்காக வந்தார்..?

பிரான்சில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்சில் உள்ள Marseille நகரில் 13th Arrondisement என்ற பகுதியில் யூத பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை உடனடியாக கைது செய்திருக்கின்றனர். அதன்பின்பு அப்பகுதி முழுவதும் உடனடியாக பரிசோதனை பணியில் ஈடுபடுமாறும் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த மர்ம நபர் யார்? அவர் எதற்காக கத்தியுடன் பள்ளிக்குள் நுழைய முயற்சி செய்தார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |