கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் பகுதியில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பள்ளிக்கு எதிரே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பொன்மனை ஈஞ்சக்கோட்டை பகுதியில் வசிக்கும் வினோத் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் வினோத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.