Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்றதால்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நடுத்தெருவில் சன்னாசி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சன்னாசி நாகராஜை கண்டித்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அல்லிநகரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |