லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீராங்குப்பம் பகுதியில் தண்டபாணி-அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(16), வர்ஷா ஸ்ரீ(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஜெயஸ்ரீ புதுகோவிந்தாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்டபாணி தனது மகள்களை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே சென்ற போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயஸ்ரீயும், வர்ஷாஸ்ரீயும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தண்டபாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் லாரி ஓட்டுனரான ஜார்ஜ் ஜெயசீலன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.