பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்ற 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில தட்சிணா கன்னடா மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி உள்ளனர். பின்னர் அவரை ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, வண்டியில் இருந்து அவரை வெளியில் தள்ளி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மங்களூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.