கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி சுவாதி என்ற மகள் இருந்துள்ளார். அந்த சிறுமி கீழநாலுமாவடியிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது நெல்லையிலிருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்ற கார் மோதிவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமியின் மீது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று ஏறி இறங்கியது.
இதனால் படுகாயமடைந்த அந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அம்புரோஸ் டேவிட் பிராங்கோ என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.