Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற சிறுமி” தொழிலாளியின் கொடூரச்செயல்…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாரம்பட்டு காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமியிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து மிட்டாய் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி அதைப் பெற்றுக்கொண்டு மிட்டாய் வாங்கி விட்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை  கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 2011-ஆம் ஆண்டு சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள்  இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |