சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சங்கராபுரம் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சென்னைக்கு சென்று சிறுமியை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் முனீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.