Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத பெற்றோர்…!!

2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கை பஜனை கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாரம் பகுதி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனராக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா வழக்கம்போல ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோ திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஆட்டோ ஸ்ரீநிஷா பயணித்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |