காணாமல் போன பள்ளி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேஜாஸ்ரீ(15) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்றால் தேஜாஸ்ரீ மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேஜாஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.