11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.