Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் ஊழியர் கைது…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29-ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவரது பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் பெற்றார் விசாரித்த போது, பள்ளியில் பியூனாக பணிபுரியும் ராஜ்(38) என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |