Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்…. தமிழக முதல்வர் அட்வைஸ்….!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவர்-சிறுமிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் 805 வாகனங்களை தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு விழாவில் பேசிய முதல்வர், பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு படிப்பை திணிக்கும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது .

அவர்களுக்கு கல்வி, உடல் நலம், ஆரோக்கியம், மன தைரியம் உள்ளிட்ட அனைத்தையும் போதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போது தான் நான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன் என்றார். மேலும் சில மாணவர்களிடம் காலையில் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது சிலர் சாப்பிடவில்லை என்று கூறியது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நான் நேற்று தான் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தில் கையெழுத்திட்டேன். மேலும் சிறுவர்-சிறுமிகள் அனைவரும் கண்டிப்பாக காலை உணவு அருந்த வேண்டும் எனவும் அட்வைஸ் கூறினார்‌.

Categories

Tech |