Categories
உலக செய்திகள்

பள்ளிக்கு “டிமிக்கி” கொடுக்க… பொய் கொரோனா டெஸ்ட்…!!!

உலகில் உள்ள பல நாடுகளை ஆட்டிப் படைத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, தற்போது மக்களுக்கு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. பல நாடுகளில் 75% மக்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்திலும் மாணவர்கள் பலருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால் நமக்கு கொரோனா இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்ஏடி எனப்படும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தக் கருவியில் மாணவர்கள் எச்சிலுக்கு பதிலாக எலுமிச்சைச் சாறு மற்றும் வினிகர் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களுக்கு கொரோனா உள்ளது என்று கூறி பள்ளிகளுக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இதனை டிக் டாக்கிலும் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |