சத்துணவில் சுவையில்லை, உணவு சரியாகச் சமைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சமையல்காரர்கள் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் சத்துணவு கூடத்தில் நுழைந்த அவர் சத்துணவு உணவை சாப்பிட்டு பார்த்தார். அது சரியாக சமைக்கபடவில்லை எனவும், உணவில் எந்த சுவையும் இல்லை என்றும் கூறி அங்குள்ள சமையல் செய்பவர்களை எச்சரித்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்த நியாயவிலைக் கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கும் சோதனை செய்தார். இந்த மாதம் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விபரம் குறித்தும் நியாயவிலை கடைகளில் உள்ள இருப்பு பொருட்கள் குறித்தும் தெரிந்து கொண்டார்.