Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு பேக் கொண்டுவர வேண்டாம் – ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு …!!

பள்ளி மாணவர்கள் இனி BAG கொண்டுவர வேண்டாம் என்ற உத்தரவை ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான்  மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அந்த மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இனி எல்லா சனிக்கிழமை வேலை நாட்களில் மாணவர்கள் புத்தக பையை சுமந்துக்கொண்டு பள்ளிக்கு வர  வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

சனிக்கிழமை பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திற்கு பதிலாக இலக்கியம், கலாச்சாரம்,  விளையாட்டு, உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு மாணவகர்கள் கல்வி குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ள பெற்றோர்-அசிரியர்கள் கூட்டம் சனிக்கிழமை நாட்களில் நடைபெறுமென்று  முதல்வர் அறிவித்தார்.

Categories

Tech |