புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கடந்த 10-ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் வந்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மாணவர் “மேம் ப்ளீஸ்… நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க… லீவு இல்லன்னா பைத்தியம் ஆயிடுவேன் போல… பலத்த மழை பெய்து.. லீவு மட்டும் விடுங்க உங்களுக்கு கோவில் கட்டுறேன் என அனுப்பியுள்ளார்.
மற்றொரு மாணவர் ” “மார்க் வாங்கலா மேம் நாளைக்கு எல்லாரும் கேட்பாங்க… உங்களை தான் நம்பியிருக்கேன்… எனக்காக மட்டும் இல்லை” அனைவருக்காகவும் சேர்த்து தான் லீவு விடுங்க” என குறிப்பிட்டுள்ளார். இதனால் பல்வேறு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தார். அந்த அறிவிப்பு வந்த பிறகு ஒரு மாணவன் “உங்களை மறக்க மாட்டேன் நீங்கள் ஒரு தேவதை” என குறுந்தகவல் அனுப்பி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.