Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீட்டிலிருந்தே படிக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.  ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியத்தற்கான சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் 6 நாட்களும் பள்ளி செயல்படும். வீட்டிலிருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் படிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |