கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Categories