பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் சுரேஷ்பாபு(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து சூதாடி பொழுதை கழித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
புவனேஸ்வரி தனது மகள் மற்றும் மகளின் பள்ளிக்கூட கட்டணம் 20 ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு மனைவிக்கு தெரியாமல் அந்த பணத்தை எடுத்து சூதாடி இழந்துவிட்டார். இதனை அறிந்து மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.