கடந்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகளின் செயல் திறன் குறியீட்டில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது.மொத்தம் ஆயிரம் புள்ளிகளில் பல்வேறு அளவுகோல்களில் 900 முதல் 950 புள்ளிகளை பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன. இந்தியாவில் வற்ற மாநிலங்கள் பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம்.இதில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதன் முறையாக இரண்டாவது இடத்தில் உள்ளன.
எந்த மாநிலமும் 951 முதல் 1000 புள்ளிகளுக்கு இடையே தரவரிசையில் கிடையாது. கல்வியின் தரம், பள்ளிகளுக்கான அணுகள், கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு,கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் சமத்துவம் ஆகிய ஐந்து அளவுகோள்களின் அடிப்படையில் செயல்திறன் குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் பள்ளி கல்வி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அத்தகைய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் இந்த குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 906 மதிப்பெண்கள் பெற்று தமிழகம் சிறந்து விளங்குகின்றது.