Categories
மாநில செய்திகள்

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள்…. பள்ளிகளுக்கு பறந்த அரசின் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கொரோனா  கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் கல்வி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் சென்று இருக்கின்றனர். அதனால் தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதில் மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கவும், இடைநிற்றலை தடுக்கவும்  பல்வேறு தகவல்களை சேகரித்து ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எய்ட்ஸ்  நோய் பற்றிய விழிப்புணர்வு, இருபாலர் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக செயல்படுத்த என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |