முட்புதரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே கோட்டைமேடு ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே இருக்கும் முட்புதர்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் திடீரென புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு புதர்களில் பற்றி அறிந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.