Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளியில் அடுத்தடுத்து மயங்கிய…. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்….. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர்.

சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு அடுத்தடுத்து ஒருவருக்கு பின் ஒருவர் மயங்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |