ஆதி திராவிட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி இருக்கும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை.
மேலும் போதுமான ஆசிரியர்களும் இல்லை என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் போதிய ஆசிரியர்கள் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். இதன்பின் சாலை மறியல் கைவிடப்பட்டது