மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினரும், விரைவு அதிரடி படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். சம்பவத்திற்கு பின் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இனி பள்ளிக்கு சீருடையில் வரவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.