ஆந்திரா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் குடி போதையில் நடனம் ஆடியுள்ளனர். மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக ஊடங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் ஐந்து மாணவர்களையும் பள்ளியை விட்டு வெளியேற்றினர். அதனை தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது வாங்குவதற்காக மற்ற மாணவர்களிடம் பணம் கேட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் ஐந்து பேரும் மது அருந்திவிட்டு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு மாணவர்கள் பைகளை சோதனையிட்டபோது மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 4 மாணவர்கள்8 ஆம் வகுப்பு மற்றும் ஒரு மாணவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சக்ரு நாயக் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து இடமாற்ற சான்றிதழ் வழங்கியுள்ளார். மேலும் மற்ற மாணவர்களை பாதுகாக்கக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குழந்தை உரிமைகள் அமைப்பான திவ்யா திஷா சைல்டுலைனின் இயக்குனர் இஸிடோர் பிலிப்ஸ் கூறியது, “மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் மாணவர்களை வெளியேறுவதன் மூலம் பள்ளி வெறுமனே கை கழுவ முடியாது. பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களையும் கண்காணிக்கப்பது பள்ளியின் பொறுப்பு ஆகும். மேலும் ஒரு மாணவர் குடும்பம் மற்றும் பள்ளியின் துணை தயாரிப்பு ஆகிய இரு நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். எனவே மாணவர்களை வெளியேற்றுவதற்கு பதிலாக தவறான மாணவர்களின் நடத்தைகளை தடுக்க பள்ளிகள் மனநல ஆலோசனை வழங்கவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.