கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு முன் 5 வயது பூர்த்தியாகும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் என்று பொது கல்வித் துறை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதிக்கு முன் 5 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கக் கூடாது என்று வரைவு பள்ளி கையேடு தெளிவுபடுத்தியுள்ளது. இதையடுத்து தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் குழந்தைகள் முன் பள்ளிப்படிப்பை சேருவதற்கு முன் முடித்திருக்க வேண்டும் எனவும் அது 3 வயதிலிருந்தே தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 18 வயது வரை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்ட வரைவு மீதான விவாதத்தை பொதுக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளும், மாணவர் சேர்க்கைக்கு இதே அளவுகோலைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் விதிமுறைகளை, பள்ளிகளில் பின்பற்றலாம் என்றும் வாரியம் கூறியிருந்தது. இருந்தாலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தரம் I இல் மாணவர் சேர்க்கையானது 6 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.