ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை அருகில் கவலைவென்றான் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு சத்துணவு சாப்பிட்ட 42 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அதாவது இந்த பள்ளியில் நேற்று மதியம் 87 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். இதையடுத்து மதியம் 3:30 மணியளவில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, தலைசுற்றல் ஏற்பட்டது. அதன்பின் சில நிமிடங்களில் பல பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அருகிலுள்ள மங்களக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்.
அப்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். இதனால் அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்ப்பாக தாசில்தார் செந்தில்வேல்முருகன் கூறியிருப்பதாவது, சத்துணவில் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே முட்டை சாப்பிட்டதால் பாதிப்பா (அல்லது) உணவில் பல்லி விழுந்ததா என்று உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.