ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி “ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை”. என கூறியுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் காஷ்மீரில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது இது ஐந்தாவது சம்பவம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.