ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூலக திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாப்படுகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் நூலக திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நூலகத்தை திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி, அவர்கள் கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? என்பது பற்றியும், எளிமையாக பாடங்களை படிப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்கள் அடங்கிய நூல்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன என்று கூறியுள்ளார். பின்னர் அனைத்து மாணவர்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்களை படித்து பயன்பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.