Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் படிக்கும் போது மலர்ந்த காதல்…. கராத்தே மாஸ்டரை கரம் பிடித்த இளம்பெண்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது ஜெயலட்சுமியின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. இதனால் ஹரிஹரனின் பெற்றோருடன் புதுமண தம்பதியினரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |