பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வயல்வெளி ஓவியத்தை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேதுமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கு முன்பும் பல்வேறு மரக்கன்றுகள் வைத்துள்ளனர். தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து மிகவும் பசுமையான சூழல் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் பள்ளியில் கொல்லிமலையில் உள்ள ஒரு வயல்வெளி போல இயற்கை சார்ந்த ஓவியம் வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி வளாகம் முழுவ,தும் மரங்கள் நடுவதற்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.