Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து…. தலைமறைவான மாணவன்…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி ரேகா. ரேகா விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியின் அருகே வீடு இருப்பதால் தினந்தோரும் அவர் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்ற ரேகா திரும்பி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாணவனொருவன் பேனா கத்தியை வைத்து ரேகாவை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் ரேகா அலறியதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரேகாவை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைந்து வந்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |