Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டடங்களை உடனே இடிக்கணும்…. ஆசிரியர் கூட்டணி அதிரடி தீர்மானம்…!!!

சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி தீர்மானம் செய்துள்ளது .

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களினால் மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப் படும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊராட்சி ஒன்றிய பொறியாளரை கொண்டு பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வரும் அகவிலைப்படி உயர்வை கணக்கில்கொண்டு மாநில அரசு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். தொற்று குறைந்து வருவதை கணக்கில் எடுத்து அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |