தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்பாக கட்டண தொகையை திரும்ப வசூலிக்க கூடாது என்றும் கூறிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக கூறியுள்ளார்.