Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடைபெறுமென மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்தலை நடத்துவதற்கு மற்றும் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் திறக்க படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அதனால் பெற்றோர்களின் கருத்துக்களை ஏற்று அதன்படி முடிவு செய்ய அரசு முடிவெடுத்தது. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இதனையடுத்து மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படாத நிலையில், தற்போதைய டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வு நடத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 40 சதவீத பாடங்களை குறித்து நேரடியாக முழு ஆண்டு தேர்வு எழுதும் வகையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வருகின்ற மார்ச் மாதத்திற்கு முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி களுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு பாடங்களை விரைந்து நடத்தி தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதி நாளை அல்லது அதற்கு மறுநாள் தெரியும். அதுமட்டுமன்றி எந்தெந்த தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று அட்டவணையும் வெளியிடப்படும்.

Categories

Tech |