Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு புது கட்டுப்பாடுகள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 415 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதிலாக வாழை மட்டையாளான தட்டுகளை பயன்படுத்தவேண்டும். வகுப்பறையில் குளிர்சாதன கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது கல்லூரிகள் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |