Categories
தேசிய செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை….!!” முதல்வர் அதிரடி அறிவிப்பு….!

கர்நாடகாவில உள்ள கல்வி நிலையங்களில் உடை தொடர்பாக எழுந்துவரும் சர்ச்சை வலுப்பெற்றுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகா மாநிலம் சிவமோஹா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தேசியக்கொடிக்கு இருக்க வேண்டிய கொடிக்கம்பத்தில் காவி கொடி ஏற்றிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதோடு மாணவர்களில் ஒரு பிரிவினர் காவிநிற துண்டை அணிந்து வந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |