Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம்…. மாநில அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அப்போது மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள்அரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்க அரசு முடிவுசெய்தது. இந்நிலையில் கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கர்நாடகாவில் பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புது வருடத்திற்கான கொண்டாட்டங்களின் போது பப்கள், உணவு விடுதிகள் மற்றும் பார்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |