Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா?… சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதும், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாலாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளது.

அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து” தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

Categories

Tech |