கேரளாவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை செயலாளர்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரத் தொடங்கியுள்ளது. தினசரி தொற்று 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 152 ஆக உள்ளது. நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 87 ஆக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 22ஆம் தேதி கேரள முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை 10, 12ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நவம்பர் 15ஆம் தேதி முதல் 8, 9, 11 ஆகிய வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா குறித்த அறிவுரைகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வழங்கவேண்டுமென அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களின் பயணத்தை கவனிக்கும் பொறுப்பை காவல்துறையினர் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.