Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி திறப்பு: இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் விடுமுறை முடித்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். அதோடு, மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமா என்று சுகாதாரத் துறையிடம் பள்ளிக் கல்வித்துறை கேட்டிருக்கிறது. இது தொடர்பான விதிகள் இன்று  அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |