பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பு மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
அப்போது அருகில் பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு பெண்ணின் தலையில் மாணவர்கள் எறிந்த கல் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.