தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியும்படி கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தீவிரமாக பரவுவதை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.