Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்…. இன்றே (ஜூன் 22) கடைசி நாள்…. ஐஐடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ப்ரவர்தாக்’ என்ற சென்னை ஐஐடியின் அமைப்பு மூலமாக ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினர் அனைவருக்கும் கற்றுத் தரும் நோக்கத்தில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 6வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டம் இனிவரும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியும். இந்த பாடத்திட்டத்தை ஆன்லைன் முறையில் இலவசமாக அனைவரும் இணையவழியில் கற்கலாம்.

pravartak.org/out of the box thinking என்ற இணையத்தளத்தில் நான்கு நிலைகளில் இந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு நிலை பாடத்திட்டமும் சேர்த்து கிட்டத்தட்ட 100 மணி நேரம் இடம் பெறும். மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்க கூடிய வகையில் ஆன்லைன் முறையிலும் மொத்த படிப்பு முடிந்தவுடன் நேரடி தேர்வு நடத்தப்படும். மேலும் இந்த இணையதளத்தை காலவரையின்றி எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் இதில் பங்கு கொள்ளலாம். ஆனால் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 10 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பயன்பெறக்கூடிய வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |