Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி….. ரூ.5000 ரொக்கப்பரிசு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

அண்ணா,பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே சென்னையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி,பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக ஐந்து வித தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பரிசாக இரண்டு  பேருக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.

Categories

Tech |