Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து…. தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை….!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்குள் செல்ல வேண்டும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்குவதும், படிக்கட்டில் பயணம் செய்வதும் மாணவர்களுடைய தினசரி வாழ்க்கையில் ஒன்றாகவே மாறிவிட்டது.

இதனால் மாணவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் பள்ளி கல்லூரி நேரத்தை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு CUMTA கலந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கென்று சிறப்பு பேருந்துகளை இயக்குவது நெரிசலையும் பரிதாபமா மரணங்களையும் தவிர்க்க சிறந்த தீர்வாக இருக்கும் என்பதனால் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |