தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்/ மாணவியர்களுக்கு பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி மாணவர்களுக்கு 40 ரூபாய் ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 80 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பண்டிகை நாட்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த உணவு கட்டணத்தை அரசே உயர்த்தியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.